பொது செய்தி

தமிழ்நாடு

'கொடை'யில் குவியும் வெளிமாவட்டத்தினர் : அச்சத்தில் பொதுமக்கள்

Added : மே 17, 2020
Share
Advertisement
 'கொடை'யில் குவியும் வெளிமாவட்டத்தினர் :  அச்சத்தில் பொதுமக்கள்



கொடைக்கானல் : கொடைக்கானலில் 'இ பாஸ்' மூலம் வெளிமாவட்டத்தினர் வருவது அதிகரித்துள்ளது. இங்கிருந்து ஊரடங்குக்கு முன்பே முன்னெச்சரிக்கையாக விடுதிகளில் தங்கியிருந்தவர்கள் வெறியேற்றப்பட்டனர். சுற்றுலா பகுதிகள் மூடப்பட்டன.வெள்ளி நீர்வீழ்ச்சியில் உள்ள நகராட்சி சோதனைச்சாவடியில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு சோதனைக்கு பின்பே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

வெளிமாநிலத்தவர் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நடவடிக்கைகளால் தற்போது வரை 'கொரோனா' தொற்றில்லாத கொடைக்கானலாகவே இருக்கிறது. ஆனால் அரசு சில தளர்வுகளை அறிவித்த பிறகு, கடந்த வாரம் முதல் வி.ஐ.பி., க்கள் மற்றும் வெளி மாநிலத்தவர், வெளிமாவட்டத்தினர் தங்கள் சொத்துக்களை பராமரிப்பது, கட்டுமான பணிக்கு ஆட்களை அழைத்து வருவது, சிகிச்சை, சொந்த ஊர் திரும்புதல் என பல்வேறு காரணங்களில் இங்கு வருகின்றனர்.திருமணம், இறப்பு, சிகிச்சை என்ற காரணங்களுக்காக மட்டும் இ பாஸ் பெற்று வரலாம் என்ற நிலைமாறி சாதாரணமாக ஏராளமானோர் வருகின்றனர். இதில் தங்கள் பங்களாக்களுக்கு வரும் வி.ஐ.பி.,களும் உண்டு. இந்நிகழ்வால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.


முறைகேடாக தங்கிய டாக்டர்கள்

இதுகுறித்து ஆர்.டி.ஓ., சிவக்குமார் கூறியதாவது: உரிய காரணங்கள் இருப்பவர்கள் மட்டுமே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். வருவோரை முழுமையாக சோதனை செய்து தனிமைப்படுத்தி வைத்துள்ளோம். இதுவரை 323 பேர் தனிமையில் உள்ளனர். நேற்று முன்தினம் சென்னையை சேர்ந்த 3 டாக்டர்கள் முறைகேடாக தங்கியிருந்ததை அறிந்து தனிமைப்படுத்தியுள்ளோம், என்றார்.

வட்டார மருத்துவ அலுவலர் சந்தோஷ் கூறியதாவது: வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் தங்கியிருந்த உள்ளூர்வாசிகள், கட்டுமானம், உணவக பணியாளர்கள் தற்போது அரசு வழிகாட்டுதல்படி வருகின்றனர். இதுவரை சென்னையை சேர்ந்த 62 பேர், மகாராஷ்டிராவை சேர்ந்த 15 பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்கிறோம்.சோதனைச் சாவடியை மீறி வந்து முறைகேடாக தங்கியிருப்போர் விவரமும் சேகரிக்கப்படுகிறது. காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது என்றார்.

இ பாஸ் முறையில் வி.ஐ.பி., க்களுக்கு தளர்வு உள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில் அதிகாரிகள் தரப்பில் மழுப்பலான பதிலே வருகிறது.நோய் தொற்றில்லாத கொடைக்கானலில் புதிய நபர்கள் வருகை பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X