பொது செய்தி

இந்தியா

மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
மும்பை: நாட்டில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றான மஹாராஷ்டிராவில், பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று (மே 16) ஒரே நாளில் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு கொண்ட மாநிலமாக உள்ளது மஹாராஷ்டிரா. நேற்று (மே 16) அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நாளில் 1,606 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 884
Maharashtra, Mumbai, Corona Cases, Coronavirus, Covid-19,  corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases, மஹாராஷ்டிரா, மும்பை, கொரோனா, வைரஸ், கோவிட்-19,

மும்பை: நாட்டில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றான மஹாராஷ்டிராவில், பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று (மே 16) ஒரே நாளில் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு கொண்ட மாநிலமாக உள்ளது மஹாராஷ்டிரா. நேற்று (மே 16) அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நாளில் 1,606 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 884 பேர் மும்பையை சேர்ந்தவர்கள். இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. மும்பையில் மட்டும் கொரோனா பாதிப்புடையோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.


latest tamil newsமிக அதிக பாதிப்புகளை கொண்ட நகரமான மும்பையில் நேற்று 41 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் இருவர் 40 வயதிற்குட்பட்டவர்கள்; 27 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். மேலும் அவர்களில் 24 பேர் ஒன்றுக்கு மேற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள். மும்பையில் மட்டும் இதுவரை 696 பேர் இறந்துள்ளனர். சனி அன்று 524 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,088 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் அதிக அளவில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட இடங்களில் மத்திய அரசு வழிகாட்டுதல் படி நோய் தடுப்பு செயல் திட்டம் பின்பற்றப்படுகிறது, மாநிலம் முழுவதும் 1,516 நோய் தடுப்பு மையங்கள் உள்ளது. 14,434 கண்காணிப்பு குழுக்கள் மூலம் மாநில அளவில் 60.93 லட்சம் கண்காணிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருவதால், ஊரடங்கைப் பொருத்தவரை மாநில அரசு எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை. மும்பை, தானே, புனே, மாலேகான், அவுரங்காபாத் போன்ற பெரிய நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று மஹாராஷ்டிராவின் தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் கூறியுள்ளார். மேலும், பொருளாதாரத்தை மீண்டும் அதன் பாதையில் கொண்டு செல்ல பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன, மும்பைக்கு சிறப்பு பொருளாதார தொகுப்பு ஒன்றை மஹாராஷ்டிரா கோரியுள்ளது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
17-மே-202013:09:13 IST Report Abuse
Chandramoulli 3 different parties. No proper communication. No team work. Health minister belongs to Congress and his performance is worst. No constructive plan to control . June first week normal monsoon is going to start. BMC unable to control the Corona virus disease . of this month disease may touch 55000. So far 1440 police affected and 11 police died. Only army can control the lockdown very strictly. Very soon army take charge of Mumbai. This is the latest tr.
Rate this:
Cancel
Balasubramanyan S - chennai,இந்தியா
17-மே-202010:58:11 IST Report Abuse
Balasubramanyan S Chidhambaram pl. Note . The corona infection more than 25 % is from your puppet ruling Maharashtra. Congress ruling Rajasthan ,Punjab also in the grib of காரோண what your CMs are doing. You are not giving constructive suggestions. It is not far a person always vomit venom. Rise above politics.dont be under the clutches of sonia and Rahul and Priyanka.
Rate this:
Cancel
Sapare Aude -  ( Posted via: Dinamalar Android App )
17-மே-202010:40:15 IST Report Abuse
Sapare Aude மஹாராஷ்டிராவில் இன்னமும் சரியான ஆட்சி அமையவில்லை. பாவம் ஆட்சியில் அனுபவமே இல்லாத ஒருவர் எதிர் கட்சிகளின் வலையில் வீழ்ந்து இந்த தீவிர இயற்கையின் சிற்றத்தை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் தள்ளப்பட்டிருக்கிறார்.
Rate this:
Murthy - Bangalore,இந்தியா
17-மே-202016:44:17 IST Report Abuse
Murthyகுஜராத்துக்கு என்ன காரணம்? உங்கள் சிந்தனையை மாற்றுங்கள்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X