தெருக்களில் கிருமிநாசினி தெளிப்பது பயனற்றது: உலக சுகாதார நிறுவனம்| Don't spray disinfectants to kill coronavirus, says WHO | Dinamalar

தெருக்களில் கிருமிநாசினி தெளிப்பது பயனற்றது: உலக சுகாதார நிறுவனம்

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (24)
Share
Spraying Disinfectant, Coronavirus, WHO, World Health Organization, corona, covid-19, corona outbreak, coron aupdates, corona news, corona cases, health, disinfectant spray, health ministry, world fights corona, கிருமிநாசினி, உலகசுகாதாரநிறுவனம், கொரோனா, கொரோனானைரஸ், கோவிட்-19

ஜெனிவா: தெருக்களில் கிருமிநாசினிகள் தெளிப்பது கொரோனா வைரஸை கொல்லாது, மேலும் இது ஆரோக்கியத்திற்கு கேடானது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பொது வெளியில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. சில இடங்களில் கட்டிடங்களையே கிருமிநாசினிகளால் குளிப்பாட்டுகிறார்கள். தமிழகத்தில் மக்கள் நுழையும் பொது இடங்களில் கிருமிநாசினி மேலே தெளிக்கும் வகையில் கிருமிநாசினி சுரங்கங்கள் அமைக்கப்பட்டன. இது மக்களுக்கு தோல் பாதிப்பு, கண் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும் என இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் எச்சரித்ததால் அவை நீக்கப்பட்டன.

இந்நிலையில் உலக சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: வைரஸை அழிப்பதற்காக தெருக்கள் மற்றும் சந்தைப் பகுதிகள் போன்ற வெளிப்புற இடங்களில் கிருமிநாசினி தெளிப்பது மற்றும் சுத்தப்படுத்துவது பயனற்றது. இது கொரோனா வைரஸையோ அல்லது வேறெந்த கிருமிகளையோ கொல்லாது. ஏனெனில் கிருமிநாசினி அழுக்கு மற்றும் குப்பைகளால் செயலிழந்துவிடும். கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தும் இடங்களாக தெருக்களும் நடைபாதைகளும் கருதப்படவில்லை எனவே கிருமிநாசினிகளை வெளியே தெளிப்பது மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.


latest tamil news


தனிநபர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பதை எந்த சூழ்நிலையிலும் பரிந்துரைக்கவில்லை.இது, உடல்ரீதியிலும் மன ரீதியிலும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது. இதனால், கொரோனா பாதித்த நபர் மற்றவர்களுக்கு கொரோனா பரவலை தடுக்காது. மக்கள் மீது குளோரின் அல்லது நச்சு கலந்த வேதியியல் மருந்தை தெளிப்பது என்பது கண் பாதிப்பு மற்றும் தோல் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம், குடல் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

கட்டடத்தின் உட்புறங்களில் தரையில் மருந்து தெளிக்கக்கூடாது. இவ்வாறு செய்வது மருந்து படாத இடங்களில் எந்த பயனையும் அளிக்காது. கிருமிநாசினி மருந்தில் நனைக்கப்பட்ட துணியை மூலம் துடைப்பதன் மூலமே, கிருமிகளை அளிக்க முடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X