பொது செய்தி

தமிழ்நாடு

பொதுதேர்வு மையங்கள்: மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு

Added : மே 17, 2020
Share
Advertisement

ஆத்தூர்: ஆத்தூரில், 10ம் வகுப்பு தேர்வு மையங்களில், மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு செய்தார். தமிழகத்தில், 10ம் வகுப்பு தேர்வு, ஜூன், 1 முதல் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான தேர்வு மையங்களை தயாராக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மாதேஸ்வரன்(பொ) தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள், ஆத்தூர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவிலுள்ள தேர்வு மையங்கள், புதிதாக அமைக்கும் மையங்கள் குறித்து, நேற்று ஆய்வு செய்தார். இதுகுறித்து, கல்வி அலுவலர்கள் கூறுகையில், 'மாணவர்கள் சிரமமின்றி தேர்வெழுத, ஏற்கனவே உள்ள மையங்களுடன், துணை, சிறப்பு மையங்கள், கூடுதலாக அமைக்கப்படவுள்ளன. அந்த மையங்களை ஆய்வு செய்து, முதன்மை கல்வி அலுவலர் மூலம், பட்டியல் தமிழக அரசுக்கு அனுப்பப்படும்'என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X