பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் நிறுவனம் இயங்க அனுமதி

Added : மே 17, 2020
Share
Advertisement

சேலம்: மாவட்டத்தில், அனைத்து தொழில் நிறுவனங்கள், 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். இதுதொடர்பாக, சேலம், கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி பகுதிகளிலுள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், 50 சதவீத பணியாளர்களால் இயங்கலாம். குறிப்பாக, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடைய, பேரூராட்சி பகுதியில் தொழில் நிறுவனங்கள் இயங்க, விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டு விட்டது. மேலும், 100 நாள் வேலை திட்டத்தில், அனுமதிக்கப்பட்ட, 33 சதவீத பணியாளர்களின் எண்ணிக்கை, 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுவிட்டது. அதனால், சமூக விலகலை கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து, கிருமிநாசினி தொடர்ந்து பயன்படுத்தி, தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன், உரிய நிபந்தனைகளை பின்பற்றி, அனைத்து தொழில் நிறுவனங்களையும் இயக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X