பொது செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம் அணியாத 14 ஆயிரம் பேர்: சேலம் மாநகரில் ரூ.14 லட்சம் வசூல்

Added : மே 17, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் மாநகரில், ஒரு மாதத்தில் முகக் கவசம் அணியாத, 14 ஆயிரம் பேரிடமிருந்து, 14 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் மாநகராட்சி கமிஷனர் சதீஷ் கூறியதாவது: மாநகராட்சியில், கடந்த ஏப்., 16 முதல், பொது வெளியில், முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. பின்பற்றாதவர்களிடம், அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு, அதை கண்காணிக்க, நான்கு மண்டலங்களில் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதுவரை நடந்த ஆய்வில், சூரமங்கலம் மண்டலத்தில், 3,543 பேர், அஸ்தம்பட்டியில், 3,967 பேர், அம்மாபேட்டையில், 3,570 பேர், கொண்டலாம்பட்டி மண்டலத்தில், 3,414 பேர் என, 14 ஆயிரத்து, 494 பேரிடமிருந்து, 14 லட்சத்து, 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடை உரிமையாளர், பணியாளர்கள் முகக் கவசம் அணிந்தே பொருட்களை விற்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு, பொருள் வழங்கக்கூடாது. தவறினால், கடைக்கு, 'சீல்' வைப்பதோடு, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X