பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறி போராட்டம்: வி.சி., நிர்வாகிகள் மீது வழக்கு

Added : மே 17, 2020
Share
Advertisement

சேலம்: விழுப்புரம் மாணவி எரித்து கொல்லப்பட்டதை கண்டித்து, சேலத்தில், வி.சி., கட்சியினர், நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அம்மாபேட்டை, வித்யா நகர், எட்டாவது குறுக்குத்தெருவில் வசிக்கும், மாநகர மகளிரணி துணைத்தலைவர் காயத்ரி தலைமையில், அவரது வீட்டு முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மாநகர் பொருளாளர் காஜாமைதீன் உள்பட, 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கோஷமிட்டனர். ஆனால், ஊரடங்கை மீறி, கும்பலாக கூடி, ஆர்ப்பாட்டம் நடத்திய காயத்ரி, காஜாமைதீன் உள்பட பலர் மீது, மூன்று பிரிவில், அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். அதேபோல், தலைவாசல், வீரகனூர் சுற்றுவட்டாரங்களிலுள்ள வி.சி., கட்சியினர், அவரவர் வீடுகளின் முன், கறுப்பு கொடியை ஏந்தி நின்றனர். அப்போது, வழக்கை முறையாக விசாரித்து, குற்றச்செயலில் ஈடுபட்டவருக்கு, விரைந்து தண்டனை வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X