போலீஸ் பயிற்சி பள்ளிகள் இணைப்பு: பயிற்சியாளர் மிகுதியால் நிதி வீணாவதாக குற்றச்சாட்டு| Dinamalar

தமிழ்நாடு

போலீஸ் பயிற்சி பள்ளிகள் இணைப்பு: பயிற்சியாளர் மிகுதியால் நிதி வீணாவதாக குற்றச்சாட்டு

Added : மே 17, 2020
Share

போலீஸ் பயற்சி பள்ளிகள் இணைப்பால், பயிற்சியாளர்கள் மிகுதியாக உள்ளதால், அரசு நிதி விரயமாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம், இரண்டாம் நிலை காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட, 8,538 பேருக்கு, கடந்த, 4 ல், மையங்கள், 35ல் பயிற்சிகள் தொடங்கின. ஒவ்வொரு பள்ளிக்கும், முதல்வர், துணை முதல்வர், தலைமை கவாத்து போதகர், தலைமை சட்ட போதகர், துணை கவாத்து போதகர், உதவி சட்ட போதகர் உள்பட, 15 பேருக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. சில தற்காலிக பயிற்சி பள்ளிகளில், குறைந்தளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் உள்ளதால், அருகிலுள்ள பள்ளியில் அவர்களை இணைத்து பயிற்சியளிக்கப்படுகிறது. அதன்படி, கோவை மாநகரில், நான்கு பேருக்கு ஒரு பள்ளி, கோவை மாவட்டத்தில் எட்டு பேருக்கு ஒரு பள்ளி செயல்பட்டன. தற்போது, இரு பள்ளிகளும் இணைக்கப்பட்டு, ஒரே இடத்தில் பயிற்சியளிக்கப்படுகிறது. அதேபோல், சேலம் மாநகரில், 16 பேர், மாவட்டத்தில், 70 பேர் இருந்த பள்ளிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இதனால், பயிற்சியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.

இதுகுறித்து, பயிற்சி பள்ளி முதல்வர்கள் கூறியதாவது: இரு பள்ளிகள் இணையும் நிலையில், ஒரு பள்ளிக்கு நியமிக்கப்பட்ட பயிற்சியாளர்களே போதும். கூடுதல் பயிற்சியாளர்கள் உள்ளதால், அரசு நிதி விரயமாகிறது. போலீசில், தற்போது பற்றாக்குறை உள்ளதால், இணைக்கப்பட்ட பயிற்சி பள்ளிக்கு நியமிக்கப்பட்டவர்களை, மீண்டும் பழைய பணிக்கு திரும்ப அழைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X