பொது செய்தி

தமிழ்நாடு

இலங்கை தமிழர் முகாமில் கிருமி நாசினி தெளிப்பு

Added : மே 17, 2020
Share
Advertisement

தம்மம்பட்டி: செந்தாரப்பட்டி இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த கர்ப்பிணிக்கு, தொற்று ஏற்பட்டதால், சுகாதாரத்துறையினர், கிருமி நாசினி தெளிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தம்மம்பட்டி அருகே, செந்தாரப்பட்டி தெற்கு, இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்தவர், 24 வயது கர்ப்பிணி, தன் கணவருடன், செங்கல்பட்டு தனியார் மருந்து நிறுவனத்தில் பணிபுரிகிறார். தற்போது, ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளதால், வளைகாப்பு விழா நடத்த, நேற்று முன்தினம், 'இ-பாஸ்'பெற்று, செங்கல்பட்டிலிருந்து, அவரது மாமியார், கணவரின் தம்பி ஆகியோருடன், காரில் வந்தார். நத்தக்கரை சோதனைச்சாவடி கண்காணிப்பு மையத்தில், மூவருக்கும் பரிசோதித்ததில், கர்ப்பிணிக்கு மட்டும், 'கொரோனா' இருப்பது உறுதியானது. அவரை, நேற்று, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருடன் பயணித்த, 46 வயது மாமியார், 24 வயதுடைய, கணவரின் தம்பி ஆகியோர், சேலம், 'தனிமை' வார்டில் அனுமதிக்கப்பட்டனர். சுகாதாரத்துறை, பேரூராட்சி பணியாளர்கள், நேற்று, செந்தாரப்பட்டி தெற்கு இலங்கை தமிழர் முகாமிலுள்ள, 60 குடியிருப்புகளில், 'சோடியம் ?ஹப்போ குளோரைடு' கிருமி நாசினி தெளிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X