பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய குழு அவசர கூட்டம்: ரூ.1.32 கோடியில் பணிக்கு அனுமதி

Added : மே 17, 2020
Share
Advertisement

வீரபாண்டி: ஒன்றிய குழு அவசர கூட்டத்தில், ஒரு கோடியே, 32 லட்சம் ரூபாய் மதிப்பில், பல்வேறு பணிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றிய குழு அவசர கூட்டம், நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் வருதராஜ் தலைமை வகித்தார். அதில், 15வது நிதி மானியக்குழு திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, தார்ச்சாலை, கான்கிரீட் சாலை உள்ளிட்ட மூலதன பணிகள், 50 சதவீதம், 25 சதவீதம் குடிநீர், 25 சதவீதம் திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சிகள், பள்ளி கழிப்பிட பணி மேற்கொள்ள என, ஒரு கோடியே, 32 லட்சம் ரூபாய் மதிப்பில், பணிகளுக்கு அனுமதி அளித்து, ஒரே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், துணைத்தலைவர் வெங்கடேசன் உள்பட, 16 உறுப்பினர், பி.டி.ஓ.,க்கள் ராஜகணேசன், ரேவதி உள்ளிட்ட அலுவலர்கள், முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து பங்கேற்றனர்.

கொளத்தூருக்கு ரூ.5 கோடி: கொளத்தூர் ஒன்றியத்தில், 14 ஊராட்சிகள் உள்ளன. கடந்த ஏப்., 1 முதல், அமலுக்கு வந்துள்ள, மத்திய அரசின், 15வது நிதிக்குழு மானியத்தில், கொளத்தூர் ஒன்றியத்தில் திட்ட பணி நிறைவேற்ற, 5.28 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக, பெரிய ஊராட்சியான காவேரிபுரத்துக்கு, 82.92 லட்சம் ரூபாய், சிறு ஊராட்சியான சாம்பள்ளிக்கு, 22.55 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X