பொது செய்தி

தமிழ்நாடு

சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.42.7 கோடி நிதி இலக்கு

Added : மே 17, 2020
Share
Advertisement

சேலம்: மாவட்டத்தில், நடப்பாண்டு சொட்டுநீர் பாசனம் அமைக்க, 42.7 கோடி ரூபாய் நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில், 2020 - 21ல், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில், கரும்பு, பருத்தி, தென்னை, நிலக்கடலை, பயறு வகைகள் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு, 5,700 ?ஹக்டேர் பரப்பளவில், சொட்டுநீர் பாசனம் அமைக்க, நிதி இலக்கு, 42.7 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. வேளாண் பயிர்களான மக்காச்சோளம், துவரை, தென்னை, பருத்தி, கரும்பு பயிர்களுக்கு சொட்டுநீர் பாசன கருவிகள், நிலக்கடலை, பயறுவகைகளுக்கு தெளிப்பு நீர் கருவிகள், மழைத்தூவான் அனைத்தும், 100 சதவீத மானியத்தில் பெறலாம். மழை, நிலத்தடி நீர் மட்டம் குறைவால், கிணறுகளில் இருக்கும் குறைந்த நீரை கொண்டு, நுண்ணீர் பாசனம் மூலம், பயிரின் வேர் பகுதிக்கு மட்டும், நேரடியாக செலுத்துவதன் மூலம், 30 - 40 சதவீத நீரை மிச்சப்படுத்தலாம். அதோடு, நீரில் கரையும் உரங்கள் மூலம், 20 சதவீத மகசூல் கூடுதலாக கிடைக்கும். இத்திட்டத்தில், 100 சதவீத மானியத்தில், சிறு,குறு விவசாயிகள், 75 சதவீத மானியத்தில் பயன் பெறலாம். சிறு, குறு விவசாயி சான்று, அடங்கல், கணினி பட்டா ஆகிய ஆவணங்களுடன், வட்டார வேளாண் விரிவாக்க மையம், அலுவலர்களை அணுகலாம். இலவச தொலைபேசி எண், 18004244444, www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலும், நேரடியாக பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X