பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வரின் சொந்த செலவில் கொங்கணாபுரத்தில் அரிசி வழங்கல்

Added : மே 17, 2020
Share
Advertisement

இடைப்பாடி: தமிழக முதல்வர் பழனிசாமி, தன் சொந்த பணத்திலிருந்து, இடைப்பாடி சட்டசபை தொகுதியிலுள்ள, 90 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு அரிசி வழங்கியிருந்தார். அதை, அ.தி.மு.க.,வினர் வழங்கி வருகின்றனர். நேற்று, கொங்கணாபுரம் பேரூராட்சியிலுள்ள குமரன் நகர், ரங்கம்பாளையம், மொரம்புகாடு, ராக்கியாம்பட்டி உள்பட, 10க்கும் மேற்பட்ட இடங்களில், அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி செயலர், முன்னாள் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். 3,500 குடும்பத்துக்கு, அரிசி பைகளை, ஒன்றியகுழு தலைவர் மணி வழங்கினார். இதில், ஒன்றிய செயலர், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட விவசாய பிரிவு செயலர் செல்லதுரை, ஊராட்சி தலைவர்களான, தங்காயூர் பாலாஜி, கோரணம்பட்டி ராஜ்குமார் உள்பட, அ.தி.மு.க.,வினர் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X