சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கரும்பாலையில் தீ விபத்து

Added : மே 17, 2020
Share
Advertisement

ஓமலூர்: கரும்பாலை கழிவில் ஏற்பட்ட தீயை, இரண்டு மணி நேரம் போராடி, வீரர்கள் அணைத்தனர். ஓமலூர், காமலாபுரம் அருகே, காட்டூரில், விவசாயி பழனிச்சாமி, 45, என்பவருக்கு சொந்தமான கரும்பாலை உள்ளது. அங்கு, நேற்று மதியம், கரும்பு கழிவில் தீ பற்றி எரியத்தொடங்கியது. காற்று வேகமாக வீசியதால், ஆலை பகுதிக்கு பரவிய தீ, கொழுந்துவிட்டு எரிந்தது. ஓமலூர் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க போராடினர். தொடர்ந்து, காடையாம்பட்டி தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டு, இரண்டு மணி நேரம் போராடி, வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். கரும்பு கழிவு குவிக்கப்பட்ட இடத்தின் மேலே சென்ற மின்கம்பி மூலம், மின்கசிவு ஏற்பட்டு, விபத்து நேர்ந்திருக்கலாம் என, வீரர்கள் தெரிவித்தனர். சேதம் குறித்து, ஓமலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X