சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி கர்ப்பமான விவகாரம்: கூர்நோக்கு இல்லத்தில் மாணவர் ஒப்படைப்பு

Added : மே 17, 2020
Share
Advertisement

ஆத்தூர்: மாணவியை கர்ப்பமாக்கிய புகாரில், பள்ளி மாணவரை, கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த, 13 வயது சிறுமி, அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு முடித்துள்ளார். அவர், ஐந்து மாத கர்ப்பமாக இருந்ததால், அவரது பெற்றோர், ஆத்தூர் மகளிர் போலீசில் புகாரளித்தனர். விசாரணையில், 10ம் வகுப்பு படித்து வந்த, 15 வயது மாணவர், அரசு கல்லூரியில் படிக்கும், 18 வயது மாணவர் ஆகியோருடன், தனிமையில் இருந்ததால், மாணவி கர்ப்பமானது தெரிந்தது. கடந்த, 13ல், கல்லூரி மாணவரை, போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த, பள்ளி மாணவரை, நேற்று பிடித்த போலீசார், சேலம் குழந்தைகள் நல குழுமத்தில் ஆஜர்படுத்தினர். பின், சேலம் கூர்நோக்கு இல்லத்தில், மாணவரை ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X