2 ஆண்டா தொட்டி இருக்கு; தண்ணீர் தான் இல்லை

Added : மே 17, 2020
Share
Advertisement

ஆத்தூர்: முல்லைவாடியில், இரு ஆண்டாக தொட்டி மட்டும் உள்ள நிலையில், தண்ணீர் இல்லாததால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆத்தூர் நகராட்சி, நான்காவது வார்டு, முல்லைவாடியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு, தண்ணீர் வினியோகிக்க, நகராட்சி சார்பில், 10 ஆயிரம் லிட்டர் அடங்கிய மேல்நிலை தொட்டி கட்டப்பட்டுள்ளது. அதற்கு, ஆழ்துளை குழாய் கிணறு மூலம் தண்ணீர் ஏற்றி வினியோகிக்கப்படுகிறது. அதன் மின்மோட்டார் பழுதானதோடு, தண்ணீர் இல்லாததால், இரு ஆண்டாக தொட்டி பயன்பாடின்றி உள்ளது. மக்கள், நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் பலனில்லை. இதனால், கோடை காலமான தற்போது, அத்தியாவசிய பணிக்கு கூட, போதிய தண்ணீரின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், மற்ற பகுதிகளுக்கு சென்று, பெண்கள் தண்ணீர் பிடித்து வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், 'தொட்டியை சுத்தப்படுத்தி, தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X