தமிழ்நாடு

ஒரு கரத்தில் டோக்கன்; மறு கரத்தில் மதுபானம்: 143 கடைகள் திறப்பு; குடிமகன்கள் பூரிப்பு

Added : மே 17, 2020
Share
Advertisement

ஈரோடு: ஒரு கரத்தில் டோக்கன் பெற்று, மறுகரத்தில் மது வாங்கிய குடிமகன்கள், குதூகலமாக குடித்து மகிழ்ந்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையால், தமிழகத்தில் மார்ச், 24 முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், 45 நாட்களுக்குப்பின் கடந்த, 7ம் தேதி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவால், ?ம் தேதி கடைகள் மூடப்பட்டன. உச்ச நீதிமன்ற உத்தரவால், நேற்று மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மது வாங்குவதற்கு குடிமகன்களுக்கு ஆரஞ்ச், பச்சை, இளஞ்சிவப்பு, வைலட், சிவப்பு, நீலம், பிரவுன் என ஏழு நிற டோக்கன், ஒவ்வொரு நாளும் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில், 203 கடைகளில், 143 கடைகள் திறக்கப்பட்டன. முகக்கவசம் அணிந்து, குடைபிடித்து, சமூக விலகலை கடைப்பிடித்து, குடிமகன்கள் வரிசையில் நின்று, குதூகலமாக மது வாங்கி சென்றனர். சிறிய கடையில் ஒரு மணி நேரத்துக்கு, 70 பேர், பெரிய கடையில், 100 பேர் வரை அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சென்ற பிறகே அடுத்த நபர்கள் அனுமதிக்கப்பட்டனர்.


அண்ணனுக்காக வந்த தங்கை ஈரோடு மாநகரில், 23 மதுபான கடைகள் செயல்பட்டன. தனிமைப்பகுதியில் உள்ள, 12 கடைகள் இயங்கவில்லை. ஈரோடு, பவானி சாலை மதுக்கடைக்கு, 65 வயது மூதாட்டி வந்தார். முகக்கவசம், குடை கொண்டு வரவில்லை. அவரிடம் போலீசார் விசாரித்தபோது, ''தனது அண்ணன், வயதான நிலையில் வீட்டில் உள்ளார். அவரால் நடக்க முடியவில்லை. அவருக்கு மது வாங்க வந்தேன்,'' என்றார். முகக்கவசம், குடை, ஆதார்கார்டு கொண்டு வராவிட்டால், மது வழங்க இயலாது எனக்கூறி, போலீசார் திருப்பி அனுப்பினர்.


* அந்தியூர், தவிட்டுப்பாளையத்தில் அடுத்தடுத்து இரு கடைகள் உள்ளன. இரண்டு கடைகளிலும் குடிமகன்கள் திரண்டனர். மூன்று சக்கர சைக்கிளில் வந்த ஒரு முதியவர், தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பேரூராட்சி பணியாளர் உதவியுடன், ஒரு புல் பாட்டில் வாங்கி சென்றார்.


*கோபி சப்-டிவிஷனில் உள்ள, 27 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன. பெரும்பாலான கடைகளில், குடிமகன்கள் சமூக விலகலை கடைப்பிடித்து வரிசையில் நின்றனர். சில கடைகளில், சமூக விலகலை கடைப்பிடிப்பது குறித்து, போலீசார் மைக்கில் அறிவுறுத்தினர். பல கடைகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X