பொது செய்தி

தமிழ்நாடு

சினை மாடு வயிற்றில் முழு பீட்ரூட், முள்ளங்கி: 3 மணி நேர ஆப்பரேஷனில் அகற்றம்

Added : மே 17, 2020
Share
Advertisement

கோபி: சத்தியமங்கலம் அருகே அரசூரை சேர்ந்தவர் முத்துவேல், 55; காங்கேயம் கலப்பின ரக பசுமாடு வளர்த்து வருகிறார். ஒன்பது மாதம் சினையாக உள்ளது. நேற்று காலை தீவனம் சாப்பிட முடியாமல் அவதிப்பட்டது. கோபியில் உள்ள கால்நடை பராமரிப்பு துறையின், பன்முக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பிரதம மருத்துவர் விஷ்ணுகந்தன் தலைமையில், டாக்டர்கள் தீபன் சக்கரவர்த்தி, திருநாவுக்கரசு, கதிர்வேல் அடங்கிய குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். இதில் வயிற்று பகுதியில் இருந்து, தலா ஒரு முழு கேரட், முள்ளங்கி, இரண்டு பீட்ரூட் அகற்றப்பட்டது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது: சினை மாட்டை ஸ்கேன் செய்தபோது, பீட்ரூட், முள்ளங்கி மற்றும் கேரட்டை விழுங்கியிருப்பது தெரிந்தது. மூன்று மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சைக்குப் பின் அகற்றப்பட்டது. தற்போது மாடு ஆரோக்கியமாக உள்ளது. மாடுகளுக்கு தண்ணீர் வைக்கும்போது, தொட்டிக்குள் ஏதேனும் கிடக்கிறதா? என கண்காணிக்க வேண்டும். இல்லையேல் அவை உணவுக்குழாயில் சிக்கி, கால்நடைகளை இழக்க நேரிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X