பொது செய்தி

தமிழ்நாடு

மக்களின் ஒத்துழைப்பால் மாநகரில் 540 பேர் தனிமை

Added : மே 17, 2020
Share
Advertisement

ஈரோடு: மக்களின் ஒத்துழைப்பால், ஈரோடு மாநகரில், 540 தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறியதாவது: கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ள ஈரோட்டில், மீண்டும் ஏற்படாத வகையில், தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் படிக்க சென்றோர், வேலை பார்க்கும் ஊழியர்கள், ஈரோடு திரும்பி வருகின்றனர். அவ்வாறு வருவோர் குறித்து, மாநகராட்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க, மக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது. மக்களின் ஒத்துழைப்பால் கடந்த, 11 முதல் நேற்று வரை, 540 பேர் மாநகரில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். அனைவரும் நலமுடன் உள்ளனர். இவர்கள், 14 நாட்கள் கண்காணிக்கப்படுவர். வெளியூரில் இருந்து யார் வந்தாலும், மாநகராட்சி அலுவலகத்துக்கு மக்கள் தரவேண்டும். இவ்வாறு கமிஷனர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X