பொது செய்தி

தமிழ்நாடு

'மாஸ்க்' அபராதம்: கோபி முன்னிலை

Added : மே 17, 2020
Share
Advertisement

கோபி: மாஸ்க் அணியாமல் நடமாடியதாக, 16 நகராட்சிகளில் அபராதம் வசூலித்ததில், கோபி நகராட்சி முன்னிலை வகிக்கிறது. 'கொரோனா தொற்று தடுப்புக்கு, அனைவரும் முகக்கவசம் (மாஸ்க்) கட்டாயம் அணிய வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. இதை உறுதி செய்ய, நகராட்சி சுகாதார பிரிவினர் தணிக்கை செய்து, அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டது. திருப்பூர் மண்டலத்தில், 16 நகராட்சிகள் உள்ளன. இவற்றில் மாஸ்க் அணியாமல், நடமாடியவர்களுக்கு, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதன்படி பவானி நகராட்சியில், 44 பேர், குன்னூரில் ஐந்து பேர், தாராபுரத்தில் நான்கு, காங்கேயத்தில், 15, மேட்டுப்பாளையம், 53, பல்லடம், 120, பொள்ளாச்சி, 52, புன்செய்புளியம்பட்டி, 44, சத்தியமங்கலம், 121, உதகை, 14, உடுமலைப்பேட்டை ஐந்து, வெள்ளகோவிலில், 15 பேருக்கும் நேற்று முன்தினம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோபி நகராட்சியில், 434 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X