நர்சிங் மாணவி தற்கொலை: டிப்ளமோ மாணவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நர்சிங் மாணவி தற்கொலை: டிப்ளமோ மாணவர் கைது

Added : மே 17, 2020
Share

அந்தியூர்: அந்தியூர் அருகே, நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலையில், கல்லூரி மாணவனை, போலீசார் கைது செய்தனர். அந்தியூரை அடுத்த எண்ணமங்கலம், வாகைமரத்துக்கொடிக்கால் பகுதியை சேர்ந்தவர் கிட்டான். கூலி தொழிலாளியான இவரின் மகள் கார்த்திகா, 20; தனியார் நர்சிங் கல்லூரி மாணவி. கடந்த, 13ம் தேதி இரவு, வீட்டில் இருந்து மாயமானார். மறுநாள் அதே பகுதியில், தோட்டத்து கிணற்றில் சடலமாக மிதந்தார். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரித்தனர். திண்டலை சேர்ந்தவர் புகழேந்தி, 20; ஈரோட்டில் தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இவரை மூன்றாண்டாக கார்த்திகா காதலித்துள்ளார். சில நாட்களாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்து கார்த்திகா, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்நிலையில் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக, புகழேந்தியை கைது செய்த போலீசார், பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பவானி கிளைச்சிறையில் அடைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X