சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிக உயரத்துக்கு பாரம் ஏற்றிய லாரி உரசியதால் ரயில்வே பாலத்தில் சேதம்

Added : மே 17, 2020
Share
Advertisement

ஈரோடு: அதிகபாரம் ஏற்றி வந்த லாரி, ரயில்வே நுழைவு பால தடுப்பு கம்பியிலும், சுவரிலும் மோதி நின்றதால், ஈரோட்டில் போக்குவரத்து பாதித்தது. கரூரில் இருந்து ஈரோட்டுக்கு, சரக்கு ஏற்றிய ஒரு லாரி, நேற்று காலை வந்தது. சாவடிபாளையம் புதூர்-கேட்டு புதூர் ரயில்வே நுழைவு பாலத்தை கடக்க முற்பட்டது. அதிக உயரத்துக்கு பாரம் இருந்ததால், பாலத்தின் முன்புற இரும்பு தடுப்பில் உரசி நின்றது. சாலையை அடைத்துக் கொண்டதால், பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் தவித்தனர். இ?தயடுத்து லாரியில் இருந்த மூட்டைகள் கொஞ்சம் இறக்கப்பட்ட பின், அரை மணி நேரம் கழித்து மீண்டும் கிளம்பியது. அப்போது ரயில்வே பாலத்தின் கான்கிரீட் பாலத்தில் உரசியதால், லேசான சேதம் ஏற்பட்டது. மீண்டும் பாதி மூட்டைகளை இறக்கிய பின் லாரி சென்றது. இதனால் அப்பகுதியில், 45 நிமிடங்களுக்கு பின் போக்குவரத்து சீரானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X