தொழிலாளி கொலையில் மேலும் ஐந்து பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளி கொலையில் மேலும் ஐந்து பேர் கைது

Added : மே 17, 2020
Share
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே, கட்டட தொழிலாளி கொலை வழக்கில், மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மகாவீர் நகரை சேர்ந்தவர் போஸ், 24; கட்டட தொழிலாளி. கடந்த, 7ல் குடிபோதையில் நடந்த தகராறில், ஏழு பேர் கொண்ட கும்பல் கட்டையால் அடித்து அவரை கொலை செய்தனர். ராணிப்பேட்டை போலீசார் இந்த கொலை தொடர்பாக, காரையை சேர்ந்த, ராஜசேகர், 24, வரண்ராஜ், 26,

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே, கட்டட தொழிலாளி கொலை வழக்கில், மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மகாவீர் நகரை சேர்ந்தவர் போஸ், 24; கட்டட தொழிலாளி. கடந்த, 7ல் குடிபோதையில் நடந்த தகராறில், ஏழு பேர் கொண்ட கும்பல் கட்டையால் அடித்து அவரை கொலை செய்தனர். ராணிப்பேட்டை போலீசார் இந்த கொலை தொடர்பாக, காரையை சேர்ந்த, ராஜசேகர், 24, வரண்ராஜ், 26, ஆகியோரை கடந்த, 8ல் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அம்பேத்கர் நகரை சேர்ந்த, விஜய், 24, உதயகுமார், 20, அகேஷ், 23, அஜித்குமார், 24, அக்ரம், 21, ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X