பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைப்பு

Added : மே 17, 2020
Share
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கொரோனா சிறப்பு வார்டில் போதுமான படுக்கை வசதி இல்லாததால், தனியார் மருத்துவமனையில், சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 150 படுக்கை வசதியுடன் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த, 2 வரை, 15 பேர் மட்டுமே கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த, 15 நாட்களில் மள மளவென உயர்ந்து, நேற்று வரை, 148 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், நாள்தோறும் கொரோனா தொற்று பாதிப்படைவோர் அதிகரித்து வருவதால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதி இல்லை. எனவே, 50 வயதுக்கு அதிகமானவர்களையும், 10 வயதுக்கு குறைவானவர்களையும், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற வயதினருக்கு சிகிச்சை அளிக்க, அத்தியந்தலில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிறப்பு கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X