பொது செய்தி

தமிழ்நாடு

பெங்களூருவிலிருந்து காட்பாடி வந்த 50 வட மாநிலத்தவர்கள் மீட்பு

Added : மே 17, 2020
Share
Advertisement
திருப்பத்தூர்: பெங்களூருவிலிருந்து காட்பாடிக்கு, ரயில்வே தண்டவாளம் வழியாக நடந்து வந்த, 50 வடமாநிலத்தவர்கள் மீட்கப்பட்டனர். வேலூர் மாவட்டத்தில் தங்கியுள்ள வடமாநிலத்தவர்கள் காட்பாடியிலிருந்து சிறப்பு ரயில்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் தகவல், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வசிக்கும் வடமாநிலத்தவருக்கு தெரிய வந்துள்ளது. அவர்கள் அங்கிருந்து, காட்பாடி வர,

திருப்பத்தூர்: பெங்களூருவிலிருந்து காட்பாடிக்கு, ரயில்வே தண்டவாளம் வழியாக நடந்து வந்த, 50 வடமாநிலத்தவர்கள் மீட்கப்பட்டனர். வேலூர் மாவட்டத்தில் தங்கியுள்ள வடமாநிலத்தவர்கள் காட்பாடியிலிருந்து சிறப்பு ரயில்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் தகவல், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வசிக்கும் வடமாநிலத்தவருக்கு தெரிய வந்துள்ளது. அவர்கள் அங்கிருந்து, காட்பாடி வர, வாகன வசதி இல்லை. இதனால், பெங்களூருவிலிருந்து, ஒடிசாவை சேர்ந்த, 50 பேர் கடந்த, 13ல், ரயில்?வே தண்டவாளம் வழியாக, காட்பாடி நோக்கி நடந்து வந்தனர். நேற்று காலை, 10:00 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகே அவர்கள் வந்தபோது, ரயில்வே போலீசார் அவர்களை மீட்டு, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, காட்பாடிக்கு சிறப்பு பஸ்சில் அனுப்பி, அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். ஒடிசாவுக்கு சிறப்பு ரயில் செல்லும்போது அவர்களை அனுப்பி வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தடை செய்த ரயில்வே தண்டவாளத்தின் மேல், 25 ஆயிரம் கே.வி., மின்சாரம் செல்லும் கம்பி உள்ளது. அதன் கீழே மக்கள் நடந்து சென்றால் அசம்பாவிதம் ஏற்படும். தற்போது, சிறப்பு ரயில், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், விபத்து அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X