போட்டி தேர்வுகளுக்கு ஆன்லைன் பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போட்டி தேர்வுகளுக்கு ஆன்லைன் பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு

Added : மே 17, 2020
Share

தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில், தன்னார்வ பயிலும் வட்டம் உள்ளது. இதன் மூலம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு உத்தரவால் இங்கு பயிற்சி பெற்று வந்தவர்கள், வீட்டில் இருந்த படியே தேர்வுக்கு தயாராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், மாவட்ட வேலை வாய்ப்பு சார்பாக போட்டித்தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் jobfairdharmapuri@gmail.com என்ற இணைய தள முகவரியில் நாளைக்குள் (மே, 18) பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X