பொது செய்தி

தமிழ்நாடு

அம்மா உணவகத்தில் தொடர்ந்து விலையில்லா உணவு: அன்பழகன்

Added : மே 17, 2020
Share
Advertisement

தர்மபுரி: ''தர்மபுரியில் உள்ள அம்மா உணவகத்தில், தொடர்ந்து விலையில்லா உணவு வழங்க வேண்டும்,'' என, அமைச்சர் அன்பழகன் அதிகாரியிடம் அறிவுறுத்தினார். தர்மபுரி, பஸ் ஸ்டாண்டில் உள்ள அம்மா உணவகத்துக்கு நேற்று காலை, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் திடீர் விசிட் செய்தார். அப்போது, அங்கு வழங்கப்படும் உணவை அவர் சாப்பிட்டு ஆய்வு செய்தார். உணவகத்தில் தரமான உணவை பொதுமக்களுக்கு தொடர்ந்து விலையில்லாமல் வழங்க வேண்டும் என, நகராட்சி கமிஷனருக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். கடந்த மார்ச், 30ல் முதல், தர்மபுரி பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகம் ஆகியவற்றில், சராசரியாக நாள் ஒன்றுக்கு, 6,000 பேருக்கு, மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இட்லி, கிச்சடி, உப்புமா, தயிர், சாம்பார் மற்றும் புளி சாதம் என, பல வகை உணவு தயாரித்து வழங்கும் பணி நடந்தது. இதுவரை, மூன்று லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின் போது, தர்மபுரி கலெக்டர் மலர்விழி, ஆர்.டி.ஓ.,(பொ) தேன்மொழி, நகராட்சி கமிஷனர் சித்ரா, தாசில்தார் சுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X