சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராயம் காய்ச்சிய 35 பேர் சிக்கினர்

Added : மே 17, 2020
Share
Advertisement

அரூர்: தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில், சாராயம் காய்ச்சி விற்ற, 35 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கொங்கவேம்பு பகுதியில் நேற்று காலை, 6:00 மணிக்கு, அரூர் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, சாராயம் காய்ச்சி விற்ற ராமமூர்த்தி, 51, கோட்டப்பட்டி வரதராஜ், 39, வேடகட்டமடுவு தங்கபாலு, 25, திருப்பதி, 25, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 1,050 லிட்டர் ஊறல், 117 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.* கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி ஸ்டேஷன் போலீசார், தக்கட்டி அருகே உள்ள சிவபுரம் பகுதியில், மதுவிலக்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சாராயம் காய்ச்சி விற்ற, அப்பகுதியை சேர்ந்த குமார், 30, என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான நாகராஜ், 32, என்பவரை போலீசாார் தேடி வருகின்றனர்.

1,110 லி., சாராயம் பறிமுதல்: திருவண்ணாமலை மாவட்டத்தில், டெல்டா தனிப்பிரிவு போலீசார் மற்றும் கலால் போலீசார் இணைந்து, நேற்று கள்ளச்சாராய வேட்டை நடத்தினர். இதில், ஆரணி அடுத்த ஒட்டம்பட்டு, அரசாணி பாளையம், வசந்தபுரம், செங்கம் பகுதியில் வளையாம்பட்டு, ஜவ்வாதுமலையில் ஜமுனாமரத்தூர், கண்ணமங்கலத்தில், களம்பூர் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் கள்ளச்சாராய வேட்டை நடத்தினர். இதில், 30 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து, 1,110 லி., சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், 2,430 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்தனர். கள்ளச்சாராய கடத்தலுக்கு பயன்படுத்திய எட்டு பைக்குகள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X