பொது செய்தி

தமிழ்நாடு

கொளுத்தும் வெயிலில் காத்திருந்து மது வாங்கிச்சென்ற 'குடிமகன்'கள்

Added : மே 17, 2020
Share
Advertisement

அரூர்: அரூரில் டாஸ்மாக் கடைகளில், மதுபாட்டில் வாங்க, கடும் வெயிலால் நிற்க முடியாமல் அவதிப்பட்ட குடிமகன்கள், தங்கள் செருப்பை வரிசையில் வைத்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.
கொரோனா பாதிப்பால், கடந்த மார்ச், 24 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் கடந்த, 7ல் திறக்கப்பட்டன. பின், உயர்நீதிமன்ற உத்தரவால் மறுநாளே மூடப்பட்டன. உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதில், சென்னை, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தமிழக அரசு தடை பெற்றது. இதையடுத்து, நேற்று காலை, 10:00 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.


தர்மபுரி மாவட்டம், அரூரில் உள்ள டாஸ்மாக் கடை முன், மது வாங்க குடிமகன்கள், காலை, 7:00 மணி முதலே வர துவங்கினர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. குடிமகன்கள் வெயிலில் நிற்க முடியாமல், தரையில் வரையப்பட்டிருந்த சமூக இடைவெளி வட்டத்துக்குள் செருப்பை வைத்து விட்டு, அருகில் இருந்த மரநிழலில் அமர்ந்து காத்திருந்து மது வாங்கிச்சென்றனர்.


* டாஸ்மாக் கடைகளுக்கு வருவோருக்கு விதிக்கப்பட்ட வழிமுறைகளை கண்காணிக்க, தர்மபுரி மாவட்டத்தில், 55 டாஸ்மாக் கடைகள் முன், போலீசார் குவிக்கப்பட்டனர். நீதிமன்றத்தின் விதிகளை பின்பற்றாததால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், விழிப்புணர்வு பெற்ற குடிமகன்கள், நேற்று முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட நீதிமன்ற உத்தரவுகளை கடைப்பிடித்தனர். டாஸ்மாக் கடைகள் திறப்பு தொடரும் என்பதால், மதுபிரியர்கள் டாஸ்மாக் கடைகள் முன் ஒரே நேரத்தில் குவிவதை தவிர்த்தனர். இதனால், தர்மபுரி மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகள் முன், கூட்டம் குறைந்தே காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X