சேதமான உரக்கிடங்கு கொட்டகை சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

Added : மே 17, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி அடுத்த பாடியில், சேதமான நிலையில் உள்ள உரக்கிடங்கு கொட்டகையை சீரமைக்க வேண்டும். தர்மபுரி மாவட்டம், பாடியில், பத்து ஆண்டுகளுக்கு முன், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில், உரக்கிடங்கு கொட்டகை அமைக்கப்பட்டது. இதில், பாடி பகுதியில் சேகரிக்கும் குப்பையை, தூய்மை பணியாளர்கள் சேகரித்து கொண்டு வந்து, மட்கும்குப்பை மற்றும் மட்காத குப்பையாக பிரித்து உரமாக்கி வந்தனர். இந்நிலையில், ஐந்தாண்டுக்கு முன் பெய்த பலத்த மழையால், உரக்கிடங்கின் கொட்டகை சேதமானது. இதனால், இதில் உரம் உற்பத்தி செய்யும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது வரை இதை சீரமைக்காததால், கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. சேகரிக்கப்படும் குப்பையை, தூய்மை பணியாளர்கள் தீயிட்டு எரித்து வருகின்றனர். குப்பைக்கு தீ வைப்பதால், இப்பகுதி முழுவதும் புகை மூட்டமாகி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. சேதமான நிலையில் உள்ள உரக்கிடங்கின் கொட்டகையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X