ரூ.65.53 லட்சம் மதிப்பில் 11 ஏரிகள் தூர்வாரும் பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.65.53 லட்சம் மதிப்பில் 11 ஏரிகள் தூர்வாரும் பணி

Added : மே 17, 2020
Share

ஓசூர்: வேப்பனஹள்ளி ஒன்றியத்தில், குடிமராமத்து திட்டத்தில், 65.53 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும், 11 ஏரிகள் தூர்வாரும் பணியை, மாவட்ட கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியத்தில், குடிமராமத்து திட்டத்தில், 2020 - 21ம் நிதியாண்டில், 11 ஏரிகளில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, எண்ணேக்கோல் புதூர் பஞ்.,ல், 6.36 லட்சம் ரூபாய் மதிப்பில் கரிசல்குட்டை ஏரியும், பில்லனகுப்பம் பஞ்.,ல், 6.76 லட்சம் ரூபாயில், பண்டப்பள்ளி குட்டை ஏரியும், கோடிப்பள்ளி பஞ்.,ல் உள்ள பெரியகோட்ட குட்டை ஏரி, 6.36 லட்சம் ரூபாய் மதிப்பிலும், மாரசந்திரம் பஞ்.,க்கு உட்பட்ட வீரோஜிபள்ளி உசோஜிராவ் குட்டை, 5.56 லட்சம் ரூபாயிலும் தூர்வாரப்படுகிறது. அதேபோல், வேப்பனஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட அரியனப்பள்ளி குட்டை, 5.55 லட்சம் ரூபாய் மதிப்பிலும், சென்னசந்திரம் பஞ்.,ல் உள்ள ஆவல்நத்தம் ஏரி, 5.75 லட்சம் ரூபாயிலும், மணவாரனப்பள்ளி பஞ்.,ல் கொல்லப்பள்ளி ஏரி, 5.80 லட்சத்திலும், சீரனப்பள்ளி ஏரி, 5.30 லட்சம் மதிப்பிலும், சிந்தகும்மனப்பள்ளி பஞ்.,ல், 6.38 லட்சம் மதிப்பிலும், நேரலகிரி பஞ்., எட்டிப்பள்ளி குட்டை ஏரி, 5.86 லட்சம் ரூபாயிலும், குரியனப்பள்ளி பஞ்.,ல் கல்குட்டை ஏரி, 5.85 லட்சம் மதிப்பிலும் என மொத்தம், 65.53 லட்சம் ரூபாய் மதிப்பில், 11 ஏரிகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. பில்லனகுப்பம் பஞ்., உள்ள பண்டப்பள்ளி ஏரியில் நடக்கும் தூர்வாரும் பணிகளை, மாவட்ட கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கரைகளில் அதிக மண்ணை கொட்டி பலப்படுத்துவதோடு, மழைக்காலத்துக்கு முன்பாக, பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என, பி.டி.ஓ.,க்களுக்கு அவர் உத்தரவிட்டார். கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., தெய்வநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் தணிகாசலம் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X