பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் படைவீரர்களுக்கு 'டோக்கன்': கேள்விக்குறியான சமூக இடைவெளி

Added : மே 17, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், முன்னாள் படை வீரர்களுக்கு சலுகை விலையில் பொருட்கள் வழங்க, நேற்று டோக்கன் வழங்கப்பட்டது. இதில், அனைவரும் சமூக இடைவெளியை மறந்து வாங்கிச் சென்றனர்.
கிருஷ்ணகிரி, ஐந்து ரோடு ரவுண்டானா அருகே, ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள், சலுகை விலையில் பொருட்கள் பெற, 'கேன்டீன்' செயல்படுகிறது. இதில், 8,000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். அவர்கள் மாதந்தோறும் வீடுகளுக்கு தேவையான பொருட்களை, வாங்கிச் செல்கின்றனர். ஊரடங்கால் மூடப்பட்ட, 'கேன்டீன்' கடந்த, 10ல் மீண்டும் திறக்கப்பட்டது. இதையறிந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பொருட்களை வாங்க திரண்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த, கிருஷ்ணகிரி - சென்னை சாலையில் உள்ள மண்டபத்தில், ஒரு நாளைக்கு, 150 பேருக்கு டோக்கன் வழங்கப்படும் என, 'கேன்டீன்' நிர்வாகம் அறிவித்தது. இதனால், மண்டபம் முன் ஏராளமா?னார் திரண்டனர். இதையடுத்து, டோக்கன் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டு 'கேன்டீன்' மூடப்பட்டது. இதனால், முன்னாள் ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் அவர்களுக்கு நேற்று, கிருஷ்ணகிரி முன்னாள் படைவீரர் அலுவலகத்தில் டோக்கன் வழங்கப்பட்டது. இதை, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், 1,000க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர். ஆனால், அவர்கள் சமூக இடைவெளியை மறந்து வரிசையில் நின்றிருந்தனர். அவர்களுக்கு, டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியின் அடிப்படையில், பொருட்களை வழங்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X