சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்.ஐ.,க்கு மிரட்டல்: இருவர் மீது வழக்கு

Added : மே 17, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூர் அருகே உள்ள, மத்திகிரி ஆர்.ஐ.,யாக பணியாற்றி வருபவர் தீபா, 33; இவருக்கு கடந்த, 14ல், தொரப்பள்ளி பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், தேவராஜ் என்பவர் வீடு கட்டி வருவதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற அவர், வீடு கட்டும் பணியை தடுத்து நிறுத்த கூறியுள்ளார். அப்போது, தேவராஜின் மனைவி அவரை தகாத வார்த்தையால் திட்டி, மிரட்டல் விடுத்ததுடன், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தார். மேலும், ஆண் ஒருவர் மொபைல்போன் மூலமாக, தொடர்பு கொண்டு ஆர்.ஐ., தீபாவை மிரட்டினார். இது குறித்து, ஓசூர் டவுன் போலீசில், நேற்று முன்தினம் ஆர்.ஐ., தீபா புகார் செய்தார். தேவராஜின் மனைவி மற்றும் மொபைல்போனில் பேசிய ஆண் மீது, போலீஸ் எஸ்.ஐ., சுரேஷ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X