பொது செய்தி

தமிழ்நாடு

'மாஸ்க்' அணிந்து வருவோருக்கு 1 கிலோ பூசணிக்காய் இலவசம்

Added : மே 17, 2020
Share
Advertisement

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், தற்காலிக காய்கறி சந்தைக்கு 'மாஸ்க்' அணிந்து வந்தவர்களுக்கு, 1 கிலோ பூசணிக்காய், இலவசமாக வழங்கப்பட்டது. புதுக்கோட்டை நகராட்சி சார்பில், பொதுமக்கள், 'மாஸ்க்' அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், நகராட்சி ஆணையர், ஜீவா சுப்பிர மணியன், ஊக்குவிப்பு திட்டத்தை அறிவித்தார். இதன்படி, புதுக்கோட்டையில் செயல்படும் தற்காலிக காய்கறி சந்தைக்கு வந்தவர்கள், மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்தால், அவர்களுக்கு, 1 கிலோ பூசணிக்காயை நேற்று இலவசமாக வழங்கினார். நகராட்சி ஆணையர், ஜீவா சுப்பிர மணியன் கூறியதாவது: புதுக்கோட்டை அருகே இடையப்பட்டியில், இயற்கை முறையில் விளைவித்த மஞ்சள் பூசணிக்காய்கள், விற்பனை செய்ய முடியாமல் வீணாகின்றன என தெரிவித்தனர். நகராட்சி சார்பில், 1 டன், 1,500 ரூபாய் வீதம், 20 டன் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, மாஸ்க் அணிந்து வருவோருக்கு, தலா, 1 கிலோ இலவசமாக வழங்கப்பட்டது. இந்த மாத இறுதி வரை, இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X