தமிழ்நாடு

4,800 பணியாளர்கள் ஊதியம் பெறுவதில் சிக்கல்: போக்குவரத்து கழக நடவடிக்கையால் அதிர்ச்சி

Added : மே 17, 2020
Share
Advertisement

கரூர்: அரசு போக்குவரத்து கழக, சேலம், கோவை கோட்டங்களில், 4,800 பணியாளர்கள் ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, மார்ச், 24 முதல், அரசு பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை, சேலம் கோட்ட அலுவலக மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு, 'இந்த மாதத்தில் குறைந்தபட்ச நாட்கள் பணியாற்றியவர்களுக்கு மட்டுமே முழு ஊதியம் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டிருப்பதால், பணியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் பத்மநாபன் கூறியதாவது: கடந்த, மே, 4ல் மூன்றாவது ஊரடங்கு உத்தரவின் போது, '33 சதவீத பணியாளர்களை கொண்டு பணிகளை செய்யலாம்' என, சில துறைகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்தது. ஆனால், போக்குவரத்து கழகத்திற்கு தளர்வு அளிக்கப்படவில்லை. இருந்தபோதும், குறைந்த தொழில் நுட்ப பணியாளர்களை கொண்டு பஸ்கள் பராமரிப்பு பணி நடந்தது. இந்நிலையில், கோவை, சேலம் கோட்டங்களில், குறைந்தபட்ச நாட்கள் பணிபுரிந்த அலுவலக மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு மட்டுமே முழு ஊதியம் வழங்கப்படும் என, திடீரென வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதன்படி, கோவை கோட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்வு வழங்கப்பட்ட, மே, 4 முதல், 21க்குள் குறைந்தபட்சம், 50 சதவீத வேலை நாள்கள்(10 நாட்கள்) பணியாற்றியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல, சேலம் கோட்டத்தில், மே, 4 முதல், 24க்குள் குறைந்தபட்சம், 33 சதவீத வேலை நாள்கள் (7 நாட்கள்) பணி புரிந்திருக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. இந்த கோட்டங்கள் அறிவித்த நாட்களில் பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமே முழு ஊதியம் வழங்கப்படும். இல்லையெனில் விடுமுறை விண்ணப்பம் அளிக்கும் போது, அதை விடுப்பு நாட்களாக கருதி சம்பளம் வழங்கப்படும். அப்படி விடுமுறை இல்லாத போது, ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பணியாளர்கள் குறைந்தபட்ச வேலை நாட்களில் பணி செய்யாததால், கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X