இலவச மின்சார உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'இலவச மின்சார உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம்'

Added : மே 17, 2020
Share
குமாரபாளையம்: ''விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கும் உரிமையை, எந்த காலத்திலும் விட்டு கொடுக்க மாட்டோம்,'' என, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.நாமக்கல் மாவட்டம், குமார பாளையத்தில் அவர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், 13 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகளை முடிக்க சொல்லியுள்ளோம். புதிய மின் திட்டம் குறித்து,

குமாரபாளையம்: ''விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கும் உரிமையை, எந்த காலத்திலும் விட்டு கொடுக்க மாட்டோம்,'' என, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல் மாவட்டம், குமார பாளையத்தில் அவர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், 13 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகளை முடிக்க சொல்லியுள்ளோம். புதிய மின் திட்டம் குறித்து, பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கும் உரிமையை எந்த காலத்திலும் விட்டு கொடுக்க மாட்டோம். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஒரு மின்மாற்றியில் எவ்வளவு லோடு உள்ளதோ, அதன் படி கூடுதலாக உள்ளதை தேவையானவர்கள் வாங்கி கொள்ளலாம். நாங்கள் ஒரு எச்.பி., இணைப்புக்கு, 20 ஆயிரம் ரூபாய் என்று சொல்லியுள்ளோம். 'எந்தெந்த மின்மாற்றியில் லோடு இருக்கிறதோ, அருகிலுள்ள விவசாய கிணற்றுக்கு, தற்போது தண்ணீர் கீழே சென்றுவிட்ட காரணத்தினால், அதன் குதிரைத்திறன் போதுமானதாக இல்லாததால், அதை அதிகப்படுத்த வேண்டும்' என, முதல்வரிடம், விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 15 எச்.பி.,வரை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X