தமிழ்நாடு

சேலத்தை சேர்ந்த கர்ப்பிணி உள்பட 15 பேருக்கு தொற்று உறுதி

Added : மே 17, 2020
Share
Advertisement

சேலம்: வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களை, சோதனைச்சாவடி கண்காணிப்பு மையத்தில் மருத்துவ பரிசோதனை செய்ததில், சேலத்தைச் சேர்ந்த, 15 பேருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஆந்திரா, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, சென்னை, செங்கல்பட்டு போன்ற, வெளி மாநிலம், மாவட்டங்களிலுள்ள தொழிலாளர்கள், தமிழகத்திலுள்ள சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். அதன்படி, கர்நாடகாவிலிருந்து, சேலம் மாவட்டம், கல்வராயன்மலைக்கு, பஸ்களில் வந்த, 767 தொழிலாளர், ஐந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு பின் அனுப்பி வருகின்றனர். இரு நாளாக, தலைவாசல் அருகே நத்தக்கரை, ஓமலூர் உள்ளிட்ட சுங்கச் சாவடி வழியாக வந்தவர்கள், அங்குள்ள சோதனைச்சாவடி கண்காணிப்பு மையத்தில், கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். இதில், மஹாராஷ்டிரா மற்றும் சென்னை, செங்கல்பட்டிலிருந்து வந்த, மூன்று பெண்கள் உள்பட, 15 பேருக்கு, கொரோனா தொற்று இருப்பது, நேற்று உறுதியானது. அவர்களை, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று, சிகிச்சையளித்து வருகின்றனர்.

யாருக்கு? கெங்கவல்லி தாலுகா, செந்தாரப்பட்டி, இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்த, 24 வயதுடைய பெண், ஏழு மாத கர்ப்பமாக உள்ளதால், வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர். அதற்காக, அவர் வந்தபோது, நத்தக்கரை சுங்கச்சாவடி சோதனை மையத்தில் நடந்த ஆய்வில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ஆத்தூர், சார்வாயில், 45 வயது தொழிலாளி; சார்வாய்புதூரில், 34 வயது தொழிலாளி; சேலம், அம்மாபேட்டையில், 48 வயது ஆண், 54 வயது பெண், 20 வயது ஆண், 42 வயது ஆண்; மேட்டூர், கருமலைக்கூடலில், 68 வயது ஆண்; காடையாம்பட்டி, பூசாரிப்பட்டியில், 27 வயது ஆண்; சேலம், கோழிப்பண்ணையில், 37 வயது ஆண்; சேலம், பெரியபுதூரில், 32 வயது ஆண்; சேலம், நரசோதிப்பட்டியில், 65 வயது ஆண்; முள்ளுவாடி கேட்டில், 53 வயது பெண்; வீராணத்தில், 26 வயது ஆண்; ஓமலூர், மூங்கில்பாடியில், 34 வயது ஆண் ஆகியோருக்கும், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த, 35 பேர், பிற மாவட்டத்தை சேர்ந்த, ஏழு பேர் என, கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர். பூரண குணமடைந்த அனைவரும், நேற்று முன்தினம் வரை, அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், 'கொரோனா'இல்லாத மாவட்டமாக சேலம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று, ஒரே நாளில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த, 15 பேருக்கு, தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால், அவர்கள் பெயர் பட்டியல் அந்த மாநில, மாவட்டத்தில் சேர்ப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X