தமிழ்நாடு

கலெக்டர் உத்தரவு காற்றில் பறக்குது; கடைகளை மூடச்சொல்லி போலீசார் மிரட்டல்

Added : மே 17, 2020
Share
Advertisement

சேலம்: சேலத்தில் கலெக்டர் அறிவித்த நேரத்துக்கு முன்கூட்டியே கடைகளை மூடச்சொல்வதோடு, மீறு பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வதாக, வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச், 24 முதல், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த, 3 ம் தேதியிலிருந்து, படிப்படியாக தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த, 11 முதல், டீக்கடை, பேக்கரி, உணவகம், கட்டுமான பொருட்கள் கடை, மின்சாதன பொருட்கள் கடை, மொபைல்போன் கடை, சிறிய நகை கடை, சிறிய ஜவுளிக்கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட, 34 வகையான கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டது. இவற்றில் அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறி கடைகள் மற்றும் டீ கடைகள் காலை, 6:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரையும், மற்ற கடைகள் காலை, 10:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரையும் செயல்படலாம் என சேலம் கலெக்டர் ராமன் அறிவித்துள்ளார். இதனால், சேலத்தில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு, சகஜ நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில், இரவு, 7:00 மணி வரை கடை வைக்க அரசு அனுமதியளித்த போதும், போலீசார் அனுமதிக்காமல், 'கெடுபிடி'யாய் நடந்து கொள்கின்றனர் என வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து சில வியாபாரிகள் கூறியதாவது: காய்கறி, மளிகை கடைகளுக்கு மதியம், 1:00 மணி வரை அனுமதி கொடுத்த போது, சேலத்தில் போலீசார், காலை, 10:00 மணிக்கு மேல் கடைகள் நடத்த அனுமதிக்கவில்லை. தற்போது, மாலை, 4:00 மணியிலிருந்து கடைகளை மூட சொல்லி மிரட்டுகின்றனர். அரசு அனுமதி கொடுத்துள்ளதே என யாரேனும் கேள்வி எழுப்பினால், அவர்கள் மீது சமூக இடைவெளியை பின்பற்றவில்லை, முகக் கவசம் அணியவில்லை என, வழக்கு பதிவு செய்கின்றனர். மேலும் கடைகளுக்கு, 'சீல்' வைத்துவிடுவதாக மிரட்டல் விடுக்கின்றனர். கலெக்டர் உத்தரவை போலீசாரே பின்பற்றாமல் நடந்து கொள்வது வியாபாரிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. பலரும் கடும் பாதிப்புக்குள்ளாகின்றோம். போலீசாரின் இந்த நடவடிக்கை அரசுக்கும், முதல்வர் பழனிசாமிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் நிலையை சேலத்தில் உருவாக்கியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X