பொது செய்தி

தமிழ்நாடு

அம்மா உணவகத்தில் அமைச்சர் தங்கமணி ஆய்வு

Added : மே 17, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம், அம்மா உணவகத்தில் அமைச்சர் தங்கமணி ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளிபாளைம் அருகே, சந்தைபேட்டையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும், 1,500க்கும் மேற்பட்டவர்கள் மூன்று வேளையும் உணவு அருந்தி வருகின்றனர். அதற்கான செலவுகளை அமைச்சர் தங்கமணி ஏற்றுள்ளார். நேற்று, அம்மா உணவகத்தை அமைச்சர் தங்கமணி நேரில் ஆய்வு செய்தார். அங்கிருந்த பணியாளர்களிடம் உணவு தயாரிக்கும் முறை, தரம், சுவை போன்றவை குறித்து கேட்டறிந்தார். அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகளை பார்வையிட்டார். கலெக்டர் மெகராஜ், நகராட்சி ஆணையாளர் இளவரசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய குழு தலைவர் சுப்ரமணி உள்பட பலர் உடனிருந்தனர்.


* பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில், மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால் செல்கிறது. இதிலிருந்து கிளை வாய்க்கால் வழியாக தண்ணீர் கடைமடை வரை செல்லும். தற்போது, சமயசங்கிலி, ஆசாரிக்காடு, செங்குட்பாளையம், ஆலாம்பாளையம் வாய்க்கால் உள்பட, ஆறு இடங்களில், 2.5 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளை அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X