மோகனூர்: மோகனூர் அடுத்த மணப்பள்ளியில், ஊராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 94 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் உள்பட, ஏழு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி ஆசிரியர்கள் ஆலோசனை செய்து, மாணவ, மாணவியரின் குடும்பத்தினருக்கு, கொரோனா நிவாரண பொருள் வழங்கலாம் என முடிவு செய்தனர். அதையடுத்து, நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் நாகலட்சுமி தலைமை வகித்தார். மணப்பள்ளி ஊராட்சி தலைவர் இந்துமதி, 94 மாணவர்களின், 75 குடும்பத்தினர், ஐந்து தூய்மை பணியாளர், இரண்டு மாற்றுத்திறனாளிகள் என, 82 பேருக்கு, 500 ரூபாய் மதிப்புள்ள அரிசி, மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கினார். பி.டி.ஏ., தலைவர் கார்த்திக்ராஜா, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மாணிக்கம், பள்ளி மேலாண் குழு தலைவர் உஷா உள்பட பலர் பங்கேற்றனர்.* குமாரபாளையம் அருகே, புள்ளாக்கவுண்டம்பட்டி பஞ்., தலைவர் சிவகுமார் அங்குள்ள, 1,450 குடும்பத்தினருக்கு மளிகை பொருட்களை வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE