பொது செய்தி

தமிழ்நாடு

உத்தரபிரதேச தொழிலாளர்கள் சொந்த மாநிலம் அனுப்பி வைப்பு

Added : மே 17, 2020
Share
Advertisement
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, தனியார் நூற்பாலையில் வேலை செய்த, வடமாநில தொழிலாளர்கள், உத்தரபிரதேச மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா ஊரடங்கால், தமிழகத்தில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்களை, அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க, தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சேந்தமங்கலம் அடுத்த பெருமாபட்டியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலையில்,

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, தனியார் நூற்பாலையில் வேலை செய்த, வடமாநில தொழிலாளர்கள், உத்தரபிரதேச மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா ஊரடங்கால், தமிழகத்தில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்களை, அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க, தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சேந்தமங்கலம் அடுத்த பெருமாபட்டியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலையில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த, 60 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள், தங்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கைவிடுத்தனர். அதையடுத்து, அவர்கள் செல்வதற்காக, இரண்டு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. தொடர்ந்து, சேந்தமங்கலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து, மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, ஆர்.டி.ஓ., கோட்டைக்குமார் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். தாசில்தார் ஜனகி, மண்டல துணை தாசில்தார் வசந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X