பொது செய்தி

தமிழ்நாடு

கனரக வாகனங்கள் வருகை: போக்குவரத்து பாதிப்பு

Added : மே 17, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் நகரில் உள்ள சிறிய பாதைகளில் கனரக வாகனங்கள் வந்து செல்வதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. நாமக்கல் நகரில், ஏ.எஸ்.பேட்டையில் இருந்து திருச்செங்கோடு சாலைக்கு செல்லும் வகையில் சாலை அமைந்துள்ளது. அது, 10 அடி அகலத்தில் உள்ளது. அந்த சாலையில் ஆஞ்சநேயர் கோவிலிலுக்கு அதிகளவு பக்தர்கள் வந்து செல்வர். அதில், இலகு ரக வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். கனரக வாகனங்கள் சென்றால் எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் இல்லாமல் பின்னோக்கி பிரிவு சாலை வரை செல்லும் அவலநிலை ஏற்படுகிறது. அதனால், அந்த சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளி, கல்லூரிகளின் கனரக வாகனங்கள் கூட வருவதில்லை. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. அதனால், தற்போது, ஏ.எஸ்.பேட்டை சாலையில் அதிகளவு கனரக வாகனங்கள் வரத்துவங்கியுள்ளன. அவ்வாறு வரும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்படைய துவங்கியுள்ளது. அவசர கதிக்கு செல்லும் இருசக்கர வாகனங்கள், இலகு ரக வாகனங்களுக்கு மிகவும் இடையூறு ஏற்பட்டுள்ளது. அந்த சாலையில், இலகு ரக வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X