பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி பழைய பாலத்தில் போக்குவரத்துக்கு தடை

Added : மே 17, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம், பழைய பாலத்தில் வாகன போக்குவரத்துக்கு தடை நீடிக்கிறது. நாமக்கல் - ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையில், பள்ளிபாளையம் ஆற்றில் பழைய பாலம், புதிய உயர்மட்ட பாலம் என, இரண்டு பாலங்கள் உள்ளன. இந்த இரண்டிலும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். கொரோனா ஊரடங்கு உத்தரவால், பழைய பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டன. கடந்த சில நாட்களாக உரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்டதால், டூவீலர், கார், வேன் போன்ற வாகனங்கள் புதிய உயர்மட்ட பாலத்தில் மட்டும் சென்று வருகின்றன. பழைய பாலத்தில் இன்னும் போக்குவரத்து செல்ல தடை நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X