பொது செய்தி

தமிழ்நாடு

மாவு பூச்சி தாக்குதல்: 5,000 ஏக்கர் மரவள்ளி சாகுபடி பாதிப்பு

Added : மே 17, 2020
Share
Advertisement

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த, நாமகிரிபேட்டை, மெட்டாலா, வெள்ளகல்பட்டி, உரம்பு, முள்ளுக்குறிச்சி, நாரைகிணறு உள்ளிட்ட பகுதிகளில், 5,000 ஏக்கரில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. தற்போது மாவு பூச்சி தாக்குதல் காரணமாக பயிர்கள் முற்றிலும் காய்ந்து வீணாகியுள்ளன. வேளாண்துறை அதிகாரிகள் மாற்றுபூச்சி மூலம் மாவு பூச்சியை கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை. கடும் வெயிலின் காரணமாகவே பூச்சி வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்வதாக, வேளாண் அலுவலர்கள் தெரிவித்தனர். இது குறித்து, விவசாயிகள் கூறுகையில், ' ஏக்கருக்கு, 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்து மரவள்ளி கிழங்கு பயிரிட்டோம். தற்போது மாவு பூச்சி தாக்குதல் காரணமாக முற்றிலும் காய்ந்து நாசமாகி வருகிறது. நஷ்டம் அடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X