பொது செய்தி

தமிழ்நாடு

அமைப்பு சாரா தொழிலாளர்கள் இன்று கணக்கு துவங்க ஏற்பாடு

Added : மே 17, 2020
Share
Advertisement

நாமக்கல்: இந்திய அஞ்சல்துறை மூலம், தமிழக முதல்வர் அறிவித்த அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கான நிவாரண நிதியை பெற, அஞ்சலகங்களில், 'இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்' கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம், நிவாரண நிதியை எளிதாக வீட்டிலிருந்தபடியே பெறமுடியும். நாமக்கல் மாவட்டத்தில், 20ஆயிரம் அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு, இத்திட்டத்தின் மூலம் கணக்கு துவங்க, இன்று, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமை அஞ்சலகம், துணை அஞ்சலகம் மற்றும் கிளை அஞ்சலகங்களில், சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள், இந்த வசதியை பயன்படுத்தி, கணக்கு துவங்கி பயன்பெறலாம். இவ்வாறு, நாமக்கல் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X