பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு: வினாத்தாள் அறைக்கு பாதுகாப்பு

Added : மே 17, 2020
Share
Advertisement

நாமக்கல்: எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு, ஜூன், 1ம் தேதி துவங்க உள்ளதால், வினாத்தாள்கள் வைத்திருக்கும் அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பால், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு நடத்த முடியாமல் போனது. வரும், ஜூன், 1ம் தேதி முதல், தேர்வை நடத்த தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்து அட்டவணையை வெளியிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 310 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தேர்வு நடைபெறுகிறது. அதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் முழுவீச்சசில் செய்து வருகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் விடுபட்ட பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு வினாத்தாள்கள் நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் உள்ள, ஸ்ட்ராங் அறையில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டுள்ளது. இந்த அறைக்கு, 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், 'சிசிடிவி' கேமராவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாவட்டத்தில் நடப்பாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை, 310 பள்ளிகளை சேர்ந்த, 21 ஆயிரத்து, 303 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும், 95 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்கியிருந்து, தற்போது வெளியூரில் உள்ள மாணவர்களை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு தேர்வு எழுத அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X