பொது செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்' கடைகள் மாவட்டத்தில் திறப்பு

Added : மே 17, 2020
Share
Advertisement

நாமக்கல்: மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், நாமக்கல் மாவட்டத்தில், 174 கடைகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்த, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டது. அதையடுத்து, ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டன. இதற்கிடையில், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில், மதுக் கடைகள் திறக்கப்பட்டதால், தமிழகத்தை சேர்ந்த, குடிமகன்கள் அங்கு படையெடுத்தனர். தமிழகத்தில் மூடப்பட்டுள்ள மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்ததையடுத்து, கடந்த, 7ல், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், உரிய விதிமுறைகளை பின்பற்றாததால், இரண்டு நாட்களில், சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்ததால், மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில், 198 கடைகளில், தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளை தவிர, 174 கடைகள் திறக்கப்பட்டன. மேலும், சரக்கு வாங்க வரும் குடிமகன்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டது. மதியத்துக்கு மேல், டாஸ்மாக் கடைகளில், குடிமகன்கள் இல்லாமல், 'வெறிச்சோடி' காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X