பொது செய்தி

தமிழ்நாடு

நங்கம் காட்டுவாரி தூர்வாரும் பணி: அமைச்சர் தொடங்கி வைப்பு

Added : மே 17, 2020
Share
Advertisement

குளித்தலை: நங்கம் காட்டுவாரியை தூர்வாரும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். குளித்தலை அடுத்த, மாயனூர் காவிரி ஆற்று கதவணையில் இருந்து, கட்டளை மேட்டுவாய்க்காலில் தொடங்கி, திருச்சி மாவட்டம் தாயனூர் வரை பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் இனுங்கூரில் இருந்து வெளியேறும் நீர் நங்கம் காட்டு வாரியில் வெளியேற்றப்படுகிறது. இந்த காட்டுவாரி, சூரியனூர் பஞ்., எல்லையில் உய்யகொண்டான் வடிகால் வாய்க்காலில் இணைகிறது. இந்த நங்கம் காட்டு வாரியில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. எனவே, தூர்ந்து போன காட்டு வாரியை, தூர்வார கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், சிறப்பு திட்டத்தின் கீழ், காட்டுவாரியை தூர் வார, ஒரு கோடியே, 38 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த பணி நேற்று தொடங்கியது. கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, குளித்தலை அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டார். சப் - கலெக்டர் ?ஷக் அப்துல் ரகுமான், மாவட்ட பஞ்., குழு தலைவர் கண்ணதாசன், முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X