கரூர் மாவட்டத்தில் மதுக் கடைகள் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் மாவட்டத்தில் மதுக் கடைகள் திறப்பு

Added : மே 17, 2020
Share

கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், டாஸ்மாக் மதுபான கடைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவு சற்று தளர்த்தப்பட்ட நிலையில் கடந்த, 7ல் மாநிலம் முழுவதும் (சென்னை தவிர்த்து) டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. 40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டதால், குடிமகன்கள் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காலம் முடியும் வரை, டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அந்த தடையை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நேற்று முன்தினம், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் நேற்று காலை, 10:00 மணிக்கு மதுபான கடைகள் திறக்கப்பட்டன. கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மதுபான கடைகள், உயர்ரக மதுபான கடைகள் (எலைட் பார்) முன், குடிமகன்கள், காலை, 9:00 மணி முதல் டோக்கன் பெற்றுக்கொண்டு வரிசையில் நின்றனர். 10:00 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டதும், மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X