பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு; ரத்து செய்ய முதல்வருக்கு மனு

Added : மே 17, 2020
Share
Advertisement

கரூர்: 'ஓய்வு பெறும் வயது நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும்' என, கரூர் மாவட்ட அனைத்து துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், முதல்வர் பழனிசாமிக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்பளிப்பு ஊதியம் உள்ளிட்டவற்றை முடக்குவது ஏற்புடையது அல்ல. அவற்றை வழங்க வேண்டும். கொரோனா நிதி திரட்ட அரசுக்கு ஏராளமான வழிவகைகளும், வாய்ப்புகளும் உள்ளன. ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதன் மூலம் வேலை வாய்ப்பகத்தில் பதிந்து, வேலைக்காக காத்திருப்பவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. எனவே, மேற்கண்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X