சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு முகாமில் மோதல்: இளம்பெண் காயம்

Added : மே 17, 2020
Share
Advertisement

கரூர்: கரூரில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முகாமில், இருதரப்பினர் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. அதில், ஒரு இளம் பெண் காயமடைந்தார். கரூர் - வாங்கல் சாலை காமராஜ் தினசரி மார்கெட் அருகே நகராட்சி ஜெயப்பிரகாஷ் நடுநிலைப்பள்ளியில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், வடமாநிலத்தவர்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்கள், 35க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை, 5:30 மணிக்கு இருதரப்பினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கு, ஒருவர் கற்களை வீசி தாக்கி கொண்டனர். கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், எஸ்.ஐ., கஸ்தூரி ஆகியோர், விரைந்து சென்று மோதலில் ஈடுபட்டவர்களை விலக்கி வைத்து சமாதானப்படுத்தினர். பிறகு, மோதலில் காயமடைந்த திண்டுக்கல்லை சேர்ந்த, 24 வயது இளம்பெண்ணை, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். இதனால், வாங்கல் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X